/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குளமாக மாறிய சுரங்கப்பாதை தத்தளித்து செல்லும் வாகனங்கள் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
/
குளமாக மாறிய சுரங்கப்பாதை தத்தளித்து செல்லும் வாகனங்கள் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
குளமாக மாறிய சுரங்கப்பாதை தத்தளித்து செல்லும் வாகனங்கள் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
குளமாக மாறிய சுரங்கப்பாதை தத்தளித்து செல்லும் வாகனங்கள் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
ADDED : அக் 17, 2025 11:21 PM

பொன்னேரி: பொன்னேரியில் பெய்த கனமழையால், ரயில்வே சுரங்கப்பாதையில் குளம்போல் மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து ஸ்தம்பித்து, வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பொன்னேரி - பழவேற்காடு மாநில நெடுஞ்சாலையில், திருவாயற்பாடி ரயில்வே சுரங்கப்பாதை வழியாக, தினமும் நுாற்றுக் கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. மேலும், பொன்னேரி அரிஅரன்பஜார் அருகே உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது.
அப்பகுதியில், 3 அடி உயரத்திற்கு மழை நீர் குளம்போல் தேங்கியதால், கார், பைக் உள்ளிட்டவை சுரங்கப்பாதையை கடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மாற்று பாதைகளை நோக்கி பயணித்தன.
பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள், தேங்கிய தண்ணீரில் நீந்தியபடி செல்கின்றன. மேற்கண்ட சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதை உடனுக்குடன் வெளியேற்றுவதற்கான சரியான திட்டமிடல் இல்லாததால், சிறுமழை பெய்தாலும், வாகன ஓட்டிகளின் சிரமம் தொடர்கிறது.
பொறியியல், நீரியியல் வல்லுனர்கள் உதவியுடன் உரிய ஆய்வு மேற்கொண்டு, சுரங்கப்பாதையில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில், நெடுஞ்சாலை, போக்கு வரத்து மற்றும் நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.