/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
3 மாதமாக பயன்பாட்டிற்கு வராத கன்னடபாளையம் ரேஷன் கடை
/
3 மாதமாக பயன்பாட்டிற்கு வராத கன்னடபாளையம் ரேஷன் கடை
3 மாதமாக பயன்பாட்டிற்கு வராத கன்னடபாளையம் ரேஷன் கடை
3 மாதமாக பயன்பாட்டிற்கு வராத கன்னடபாளையம் ரேஷன் கடை
ADDED : மே 19, 2025 01:25 AM

ஆவடி:ஆவடி அடுத்த கன்னடபாளைய பகுதி 675 குடும்ப அட்டைதாரர்கள், வெள்ளானுார் ஊராட்சிக்கு உட்பட்ட சைதை வேளாண் விற்பனை கூட்டுறவு சங்கத்தில் ரேஷன் பொருட்கள் வாங்கி வந்தனர். ஏற்கனவே, வெள்ளானுாரில் உள்ள ரேஷன் கடையில் 1,000க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் இருப்பதால், பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், தொடர் கோரிக்கை அடுத்து, எம்.எல்.ஏ., நிதியில் இருந்து 11.76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கன்னடபாளையம், அம்பேத்கர் சிலை அருகே, புதிய அமுதம் நியாய விலை கடை கட்டப்பட்டு, கடந்த சில மாதத்திற்கு முன் திறக்கப்பட்டது. ஆனால், இது வரை மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால், பகுதிவாசிகள் தொடர்ந்து வெள்ளானுார், ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் சூழல் உருவாகி உள்ளது.
இது குறித்து பகுதிவாசி ஒருவர் கூறியதாவது:
மூன்று மாதத்திற்கு முன், புதிதாக ரேஷன் கடை திறந்ததும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் இதுவரை கடை பயன்பாட்டிற்கு வரவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, '800 குடும்ப அட்டைதாரர்கள் இருந்தால் தான், முழு நேர ரேஷன் கடை இயங்க முடியும்' என, தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
வரும் 1ம் தேதி
இது குறித்து துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கன்னடபாளையத்தில் உள்ள 675 ரேஷன் கார்டுடன், கோவில் பதாகை பகுதியில் உள்ள 167 ரேஷன் கார்டுகள் இணைத்து, மொத்தம் 842 கார்டுகளுடன் மேற்கூறிய அமுதம் நியாய விலை கடையை திறக்க, அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும்' என்றார்.