/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கன்னிகாபுரம் பழங்குடியின வீடுகளுக்கு விரைவில் மின்வசதி
/
கன்னிகாபுரம் பழங்குடியின வீடுகளுக்கு விரைவில் மின்வசதி
கன்னிகாபுரம் பழங்குடியின வீடுகளுக்கு விரைவில் மின்வசதி
கன்னிகாபுரம் பழங்குடியின வீடுகளுக்கு விரைவில் மின்வசதி
ADDED : செப் 08, 2025 11:30 PM
திருத்தணி, 'கன்னிகாபுரம் இருளர்களின் தொகுப்பு வீடுகளுக்கு விரைவில் மின்வசதி ஏற்படுத்தப்படும்' என, ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளர் கோமதி தெரிவித்தார்.
திருத்தணி ஒன்றியம் கன்னிகாபுரம் ஊராட்சியில், 1.40 கோடி ரூபாய் மதிப்பில் பழங்குடியினர் குடியிருப்பு திட்டத்தின் கீழ், 32 இருளர் குடும்பத்தினருக்கு புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டி, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால், வீடுகளுக்கு மின் இணைப்பு வசதியில்லாததால், இருளில் வசித்து வந்தனர்.
கடந்த மாதம் கலெக்டர் பிரதாப், கன்னிகாபுரம் இருளர் காலனியில் தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்தார்.
அப்போது, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளிடம், 'வீடுகளுக்கு விரைவில் மின்சார வசதி ஏற்படுத்தி தர வேண்டும்' என, அறிவுறுத்தினார்.
இதுகுறித்து, திருத்தணி கோட்ட ஊரக வளர்ச்சி துறை உதவி செயற்பொறியாளர் கோமதி கூறியதாவது:
கன்னிகாபுரம் இருளர் காலனியில் புதிதாக கட்டியுள்ள வீடுகளுக்கு, ஒரு வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க, 5,500 ரூபாய் முன்தொகை செலுத்த வேண்டும்.
அந்த தொகை விரைவில் செலுத்தி, இருளர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.