/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வடாரண்யேஸ்வரர் கோவிலில் காரைக்கால் அம்மையார் உத்சவம்
/
வடாரண்யேஸ்வரர் கோவிலில் காரைக்கால் அம்மையார் உத்சவம்
வடாரண்யேஸ்வரர் கோவிலில் காரைக்கால் அம்மையார் உத்சவம்
வடாரண்யேஸ்வரர் கோவிலில் காரைக்கால் அம்மையார் உத்சவம்
ADDED : மார் 18, 2025 12:43 AM

திருவாலங்காடு; திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வரும் ஸ்வாதி நட்சத்திரத்தில் போது, காரைக்கால் அம்மையார் உத்சவ விழா நடைபெறும்.
அதன்படி, நேற்று முன்தினம் ஸ்வாதி நட்சத்திரத்தை ஒட்டி, மாலை 5:30 மணிக்கு காரைக்கால் அம்மையருக்கு அபிஷேகத்துடன் விழா துவங்கியது. இரவு 10:00 மணிக்கு காரைக்கால் அம்மையாருக்கு புஷ்பநாக உத்சவம் மற்றும் பரிகார பூஜை நடந்தது.
நேற்று காரைக்கால் அம்மையார் முக்தி பெற்ற நாள் என்பதால், திருவாலங்காட்டை சுற்றியுள்ள கிராமங்களை வலம் வரும் வீதியுலா நடந்தது.
இவ்விழாவில், திருவாலங்காடு சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டு சென்றனர்.