/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கோரை புற்களால் சீரழியும் கரிம்பேடு கோவில் குளம்
/
கோரை புற்களால் சீரழியும் கரிம்பேடு கோவில் குளம்
ADDED : டிச 19, 2024 12:34 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த, கரம்பேடு கிராமத்தின், தென்மேற்கில் அமைந்துள்ளது ஞானாம்பாள் உடனுறை நாதாதீஸ்வரர் கோவில். திருத்தணி முருகர் கோவில் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில் திருமணத்தலமாக விளங்குகிறது. திருத்தணிக்கு அடுத்தபடியாக இந்த கோவிலில் ஏராளமான திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவிலில் நித்திய வழிபாடுகளுடன் பிரதோஷம் உள்ளிட்ட பூஜைகளும் நடந்து வருகின்றன.
கோவிலில் எதிரே வற்றாத தீர்த்த குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் பராமரிப்பு நீண்ட காலமாக மேற்கொள்ளப்படாத நிலையில், குளத்தில் ஏராளமான கோரை புற்கள் வளர்ந்து உள்ளன. கோவில் குளத்தை முறையாக பராமரித்து சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து வருகின்றனர்.