/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பின்றி குப்பை மேடாக மாறி வரும் கரிமேடு சுடுகாடு
/
பராமரிப்பின்றி குப்பை மேடாக மாறி வரும் கரிமேடு சுடுகாடு
பராமரிப்பின்றி குப்பை மேடாக மாறி வரும் கரிமேடு சுடுகாடு
பராமரிப்பின்றி குப்பை மேடாக மாறி வரும் கரிமேடு சுடுகாடு
ADDED : டிச 16, 2024 04:00 AM

ஆவடி:ஆவடி அடுத்த பாலவேடு, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது. இங்குள்ள கரிமேடு, அண்ணா நகரில், 8, 9 வார்டில் 3,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கரிமேடு, பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள இந்த சுடுகாடை, அனைத்து மதத்தினரும் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, சுடுகாட்டில் குப்பை கொட்டி, குப்பை மேடாக மாறி வருகிறது. இதனால், உடல்களை அடக்கம் செய்ய வருவோர், துர்நாற்றத்தால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
அங்கு அமைக்கப்பட்டு உள்ள தகன மேடை, போதிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து காட்சி அளிக்கிறது.
தொடர்ந்து குப்பையை கொட்டி வருவதால், உணவு கழிவுகளை தேடி வரும் பன்றிகளின் தொல்லையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மழை காலத்தில், சுடுகாட்டில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்குகிறது.
இறுதி சடங்கு செய்ய வருவோர், 'பொக்லைன்' இயந்திரம் கொண்டு வந்து, குப்பையை அகற்றி, உடல்களை புதைத்து வருகின்றனர். ஏற்கனவே புதைக்கப்பட்ட இடத்தில் மீண்டும் சடலங்களை புதைக்கும், அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சுடுகாட்டில் சுற்றுச்சுவர் அமைத்து, தகன மேடையை சீரமைத்து, குப்பை கொட்டுவதை தடை செய்ய வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
அதேபோல், அங்குள்ள குப்பையை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.