/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கர்லம்பாக்கம் பாலம் சீரமைப்பு பணி துவக்கம்
/
கர்லம்பாக்கம் பாலம் சீரமைப்பு பணி துவக்கம்
ADDED : பிப் 01, 2024 09:51 PM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டில் இருந்து சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கர்லம்பாக்கம் கிராமம். இங்கு, சாலையோரத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் இடையே ஓடை ஒன்று பாய்கிறது.
இதற்காக, நெடுஞ்சாலையின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலத்தின் கிழக்கு பகுதியில் இருந்த தடுப்பு சுவர், விபத்து ஒன்றில் இடிந்து விழுந்தது.
இதனால், பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், விபத்து அச்சத்தில் தவித்து வந்தனர்.
மேலும், பள்ளி மற்றும் அங்கன்வாடிக்கு செல்லும் குழந்தைகள் சிரமத்தில் இருந்தனர். இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது.
இதன் எதிரொலியாக, தற்போது இந்த தரைப்பாலத்தை இடித்து முற்றிலுமாக சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. தரைப்பாலத்தின் மேற்கு பகுதியை இடிக்கும் பணி, நேற்று இயந்திர உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.

