/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கவரைப்பேட்டை மேம்பால பணிகள்...ஆமை வேகம்!:5 கி.மீ., அணிவகுக்கும் வாகனங்கள்; 1 கி.மீ., துாரம் கடக்க 2 மணி நேரம்
/
கவரைப்பேட்டை மேம்பால பணிகள்...ஆமை வேகம்!:5 கி.மீ., அணிவகுக்கும் வாகனங்கள்; 1 கி.மீ., துாரம் கடக்க 2 மணி நேரம்
கவரைப்பேட்டை மேம்பால பணிகள்...ஆமை வேகம்!:5 கி.மீ., அணிவகுக்கும் வாகனங்கள்; 1 கி.மீ., துாரம் கடக்க 2 மணி நேரம்
கவரைப்பேட்டை மேம்பால பணிகள்...ஆமை வேகம்!:5 கி.மீ., அணிவகுக்கும் வாகனங்கள்; 1 கி.மீ., துாரம் கடக்க 2 மணி நேரம்
ADDED : அக் 21, 2024 02:07 AM

கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், கவரைப்பேட்டை பகுதியில் ஆமை வேகத்தில் நடந்து வரும் மேம்பால பணிகளால், இரு மார்க்கத்திலும் மணிக்கணக்கில் வாகன போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், செங்குன்றம் அருகே உள்ள நல்லுார் சுங்கச்சாவடியில் இருந்து கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச்சாவடி வரையிலான சாலை, ஆறுவழி விரைவுச்சாலையாக உள்ளது.
கவரைப்பேட்டை பகுதியில் மட்டும் மேம்பால இணைப்பு பணிகள் பல ஆண்டுகாலமாக கிடப்பில் போடப்பட்டு இருந்தன. சில மாதங்களுக்கு முன் பணிகள் மீண்டுமு் துவங்கப்பட்டன.
வாகனங்கள் அனைத்தும், கவரைப்பேட்டை பஜார் பகுதி அமைந்துள்ள இணைப்பு சாலைகள் வழியாக தற்போது சென்று வருகின்றன. சாலையை முறையாக பாராமரிக்க தவறுவதால் ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும், இணைப்பு சாலைகள் குண்டும் குழியுமாக மாறுகின்றன. வாகன ஓட்டிகள் 1 கி.மீ., இணைப்பு சாலையை கடப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.
அந்த சமயத்தில், சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து, 5 கி.மீ., தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை ஏற்படுகிறது.
மேலும், 1 கி.மீ., இணைப்பு சாலையை கடக்க, இரண்டு மணி நேரமாவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். சாலை பழுதை சீரமைத்தாலும், குறுகிய இணைப்பு சாலையில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலும், பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படுகிறது.
நேற்று அதிகாலை பெய்த கனமழையில், கவரைப்பேட்டை பஜார் பகுதியில் உள்ள இணைப்பு சாலைகளில் மழைநீர் தேங்கி சேதமானது. மழைநீர் தேங்கி, சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை மறைத்ததால், விபத்துகள் ஏற்பட்டன.
இந்த பள்ளங்களில் வாகனங்கள் சிக்கியதால், தடுப்பு அமைத்து, குறுகிய ஒரு வழிச்சாலை வழியாக அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டன. இதனால், இரு மார்க்கத்திலும் வாகன போக்குவரத்து கடுமையாக பாதித்தது.
கவரைப்பேட்டையில் துவங்கி கும்மிடிப்பூண்டி வரையிலான 5 கி.மீ., துாரத்திற்கு, தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
அதேபோல எதிர்திசையில், கவரைப்பேட்டையில் இருந்து புதுவாயல் வரை, 4 கி.மீ., துாரத்திற்கு வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கவரைப்பேட்டை மேம்பால பணிகளை துரிதப்படுத்தி வருகிறோம். ஐந்து மாதத்திற்குள் பணி நிறைவுபெறும். அதுவரை, இணைப்பு சாலையில் போக்குவரத்து பாதிக்காதபடி உரிய பராமரிப்பு பணிகளும், போக்குவரத்து சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும்' என்றார்.