/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
10 கிலோ கஞ்சா பறிமுதல் கேரளா இளைஞர் கைது
/
10 கிலோ கஞ்சா பறிமுதல் கேரளா இளைஞர் கைது
ADDED : ஏப் 28, 2025 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பூந்தமல்லி:பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில், பூந்தமல்லி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது, அங்கு சந்தேகம்படும்படி நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தபோது, அவர் கேரளா மாநிலத்தை சேர்ந்த ரிஜாஸ், 20, என்பது தெரிய வந்தது.
மேலும் இவர், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கஞ்சா வாங்கி வந்து பூந்தமல்லி சுற்று புறத்தில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து ரிஜாஸை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.