/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயன்பாடின்றி கேசவராஜகுப்பம் கிராம சேவை மையம்
/
பயன்பாடின்றி கேசவராஜகுப்பம் கிராம சேவை மையம்
ADDED : டிச 28, 2024 03:20 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், கேசவராஜகுப்பம் கிராமத்தில், 300 வீடுகள் உள்ளன. ஆந்திர மாநிலம், நகரி அருகே அமைந்துள்ள இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் குறைவு. தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக, பொதட்டூர்பேட்டைக்கு தினசரி வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், ஊராட்சி சார்பில், பொதட்டூர்பேட்டை கூட்டு சாலையில், கிராம சேவை கட்டடம் கட்டப்பட்டது. 10 ஆண்டுகளாக இந்த கட்டடம் எந்தவித பயன்பாடும் இன்றி பாழடைந்து கிடக்கிறது.
இந்த வளாகத்தில் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளதால், யாரும் இங்கு வருவது இல்லை.
இந்நிலையில், கிராமத்தினரின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, இந்த கட்டடத்தில் படிப்பகம், துணை சுகாதார நிலையத்தை, பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
இணைய மைய சேவைக்காக, கேசவராஜகுப்பம் கிராமத்தினர் ஆந்திர மாநிலம், நகரி அல்லது பொதட்டூர்பேட்டைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

