/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெண்ணிடம் நகையை ஏமாற்றிய இளைஞர் ஆந்திராவுக்கு கடத்தல்: போலீசார் மீட்பு
/
பெண்ணிடம் நகையை ஏமாற்றிய இளைஞர் ஆந்திராவுக்கு கடத்தல்: போலீசார் மீட்பு
பெண்ணிடம் நகையை ஏமாற்றிய இளைஞர் ஆந்திராவுக்கு கடத்தல்: போலீசார் மீட்பு
பெண்ணிடம் நகையை ஏமாற்றிய இளைஞர் ஆந்திராவுக்கு கடத்தல்: போலீசார் மீட்பு
ADDED : நவ 02, 2024 06:34 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அடுத்த நெய்வேலி பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜன், 23. இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள யு.கே.பி., என்ற கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும், அதே தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஆந்திரா மாநிலம் அழகிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் சுதா, 28, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அந்த பெண்ணிடம் ராமராஜன், ஆறு மாதத்திற்கு முன் கால் சவரன் மதிப்புள்ள கம்மலை வாங்கி 3,500 ரூபாய்க்கு அடகு வைத்துள்ளார். பின் கம்மலை திருப்பி தராமல், ராமராஜன் ஏமாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் கம்மல் குறித்து சுதாவின் வீட்டிற்கு தெரியவந்தது. இதுகுறித்து, சுதாவின் சகோதரர் அஜித்குமார் பலமுறை கம்மல் குறித்து கேட்டபோதும், ராமராஜன் அலட்சியமாக பதில் கூறியதோடு, மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார், தனது கூட்டாளிகளுடன் கடந்த 29ம் தேதி இரவு திருவள்ளூருக்கு காரில் வந்துள்ளார். தொழிற்சாலையில் பணி முடிந்து தொழிற்சாலை பேருந்தில் இரவில் ராமராஜன் வீடு திரும்பியுள்ளார். அஜீத்குமார் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட ஐந்து பேர், பூண்டி அடுத்த புதுார் பகுதியில், பேருந்தை வழிமறித்து, ராமராஜனை இறக்கி காரில் கடத்தி சென்றனர்.
இதுகுறித்து பேருந்து ஓட்டுனர் மற்றும் சக தொழிலாளர்கள், புல்லரம்லாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
திருவள்ளூர் டி.எஸ்.பி., தமிழ்ச்செல்வி உத்தரவின் படி, புல்லரம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ராமராஜனின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, ஆந்திரா மாநிலம் நாகலாபுரம் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து புல்லரம்லாக்கம் போலீசார், அக்., 30ம் தேதி காலை அப்பகுதிக்கு சென்றனர்.
போலீசார் வருவதை அறிந்த அஜித்குமார் மற்றும் அவனது நண்பர்கள், ராமராஜனை அங்கேயே விட்டுவிட்டு தப்பினர். இதையடுத்து ராமராஜனை மீட்ட போலீசார், அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ராமராஜனின் தாய் தேவி கொடுத்த புகாரின்படி புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.