/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பணத்தை திருப்பி தராத ரவுடிக்கு கத்தியால் வெட்டு
/
பணத்தை திருப்பி தராத ரவுடிக்கு கத்தியால் வெட்டு
ADDED : ஆக 01, 2025 09:31 PM
திருவாலங்காடு:மணவூர் அருகே வாங்கிய பணத்தை திருப்பி தராத ரவுடியை, அவரது நண்பர் கத்தியால் வெட்டினார்.
திருவாலங்காடு ஒன்றியம், மணவூர் அடுத்த குப்பம்கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 36; ரவுடி.
இவரும், கடம்பத்தூர் அடுத்த திருப்பாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 40, என்பவரும் நண்பர்கள்.
கோபாலகிருஷ்ணன் சில மாதங்களுக்கு முன், 30,000 ரூபாயை சுரேஷுக்கு கடனாக கொடுத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ரமேஷ் வீட்டிற்கு சென்று, கோபாலகிருஷ்ணன் பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, சுரேஷின் தலை, கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த சுரேஷை உறவினர்கள் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருவாலங்காடு போலீசார் கோபாலகிருஷ்ணனை கைது செய்து விசாரிக்கின்றனர்.