/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொண்டஞ்சேரி நெடுஞ்சாலை படுமோசம்
/
கொண்டஞ்சேரி நெடுஞ்சாலை படுமோசம்
ADDED : மார் 31, 2025 03:10 AM

கடம்பத்துார்:திருவள்ளூர் அருகே பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது திருப்பாச்சூர்.
இப்பகுதியில் உள்ள கொண்டஞ்சேரி செல்லும் நெடுஞ்சாலை வழியே, தினமும் 25,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
பல்வேறு இடங்களில் இந்த நெடுஞ்சாலை சேதமடைந்து, ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
ஜல்லி கற்கள் பெயர்ந்த இச்சாலையால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறையினர் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.