/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீரராகவர் கோவில் குளத்திற்கு கொசஸ்சலை ஆற்று நீர் திட்டம் நிறுத்தம் 7 கி.மீட்டர் சுற்றளவு நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் பணி 'அம்போ'
/
வீரராகவர் கோவில் குளத்திற்கு கொசஸ்சலை ஆற்று நீர் திட்டம் நிறுத்தம் 7 கி.மீட்டர் சுற்றளவு நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் பணி 'அம்போ'
வீரராகவர் கோவில் குளத்திற்கு கொசஸ்சலை ஆற்று நீர் திட்டம் நிறுத்தம் 7 கி.மீட்டர் சுற்றளவு நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் பணி 'அம்போ'
வீரராகவர் கோவில் குளத்திற்கு கொசஸ்சலை ஆற்று நீர் திட்டம் நிறுத்தம் 7 கி.மீட்டர் சுற்றளவு நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் பணி 'அம்போ'
ADDED : பிப் 27, 2025 01:41 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளத்திற்கு, பட்டரைபெரும்புதுார் கொசஸ்தலை ஆற்று நீர் கொண்டு வரும் திட்டம் சாலை அகலப்படுத்தும் பணியால் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், திருவள்ளூர் நகரில் 7 கி.மீ., சுற்றளவிற்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தப்படும் திட்டம் 'அம்போ'வாகிவிட்டது.
திருவள்ளூர் வீரராகவர் கோவிலுக்கு, ஒவ்வொரு அமாவாசை நாளிலும், தமிழகம் மற்றும் கர்நாடகா, ஆந்திர மாநிலத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலில் உள்ள குளத்தில் பக்தர்கள், குளித்து, தங்களது முன்னோர்களுக்கு திதி அளித்து வருகின்றனர். மொத்தம், 7.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குளம், மழை காலத்தில் தண்ணீர் நிரம்பினால், திருவள்ளூர் நகர் முழுதும், நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
மழைக்காலத்தில் மட்டும் குளம் நிரம்பி, கோடை காலத்தில் வறண்டு கிடக்கும். இதையடுத்து, கோவில் நிர்வாகம், 10 ஆண்டுக்கு முன், குளத்திற்குள் ஆறு ஆழ்துளை கிணறு அமைத்தது. பக்தர்கள் திதி அளிக்க, பால், வெல்லம் கரைக்க வசதியாக, குளக்கரையில் சிறிய அளவிலான குளம் அமைக்கப்பட்டு உள்ளது. அமாவாசைக்கு பின், அந்த தண்ணீரை வெளியேற்றி, மீண்டும் குளத்தில் இருந்து, தண்ணீரை நிரப்பி வருகின்றனர்.
கொசஸ்தலை ஆற்று நீர்
இக்குளத்தில், எப்பொழுதும் தண்ணீர் நிரம்பும் வகையில், பூண்டி ஏரியின் உபரி நீர் தேங்கும் இடமான பட்டரைபெரும்புதுாரில் சிறு தடுப்பணை கட்டி, கோவில் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம், 2016ம் ஆண்டு துவங்கியது. மொத்தம், 25 கோடி ரூபாய் மதிப்பில், பட்டரைபெரும்புதுார் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, 100 மீட்டர் நீளத்தில் தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது.
சோதனையோட்டம் நிறைவு
பட்டரைபெரும்புதுார் கொசஸ்தலை ஆற்றில் கட்டப்பட்டு உள்ள தடுப்பணையில் இருந்து, திருப்பதி தேசிய நெடுஞ்சாலையோரம், 14 கி.மீ., துாரத்தில் குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. குழாய் அமைக்கும் பணி முற்றிலும் நிறைவு பெற்றுள்ள நிலையில், 2023ம் ஆண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதில், பட்டரைபெரும்புதுாரில் இருந்து கோவில் குளத்திற்கு தண்ணீர் வரத் துவங்கியது.
இதையடுத்து, விரைவில் கோவில் குளத்தில் எப்பொழுதும் நீர் நிரம்பியிருக்கு வகையில், தொடர்ந்து தண்ணீர் திறக்கப்படும். இதன் வாயிலாக, திருவள்ளூர் நகரைச் சுற்றிலும், உள்ள பகுதிகளில், நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது என, பொதுப்பணி நீர்வளத் துறையினர் அப்போது தெரிவித்தனர்.
ஆனால், இதுவரை கொசஸ்தலை ஆற்று நீர் வராததால் திருவள்ளூர் நகரைச் சுற்றிலும் 7 கி.மீ., துாரம் நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் திட்டம் 'அம்போ'வாகி விட்டது.
இதுகுறித்து, நீர்வளத் துறையினரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
திருவள்ளூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி தற்போது துவங்கி உள்ளது. இதற்காக, சாலையின் இருபுறமும், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வருகிறது.
அப்பணியில், கோவில் குளத்திற்கு கொண்டு வர பூமிக்கடியில் புதைக்கப்பட்ட குழாய்கள் சேதமடைந்து விட்டன. சாலைப் பணி நிறைவடைந்ததும், மீண்டும், சாலையோரம் குழாய்கள் பதிக்கப்பட்ட பின்னரே, கோவில் குளத்திற்கு கொசஸ்தலை ஆற்று நீர் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.