/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.24 கோடியில் கட்டப்பட்ட கிருஷ்ணா நீர் கால்வாய்...வீண்!:ஒரு மழைக்கே தாக்கு பிடிக்காமல் சரிந்த அவலம்
/
ரூ.24 கோடியில் கட்டப்பட்ட கிருஷ்ணா நீர் கால்வாய்...வீண்!:ஒரு மழைக்கே தாக்கு பிடிக்காமல் சரிந்த அவலம்
ரூ.24 கோடியில் கட்டப்பட்ட கிருஷ்ணா நீர் கால்வாய்...வீண்!:ஒரு மழைக்கே தாக்கு பிடிக்காமல் சரிந்த அவலம்
ரூ.24 கோடியில் கட்டப்பட்ட கிருஷ்ணா நீர் கால்வாய்...வீண்!:ஒரு மழைக்கே தாக்கு பிடிக்காமல் சரிந்த அவலம்
UPDATED : ஜன 17, 2024 10:04 PM
ADDED : ஜன 17, 2024 10:03 PM

ஊத்துக்கோட்டை:ஒரு மழைக்கே
தாக்கு பிடிக்க முடியாமல், 24 கோடி ரூபாயில் கட்டப்பட்ட கிருஷ்ணா நதிநீர்
கால்வாய் சிலாப்புகள் சரிந்தது விழுந்தன. இதை பார்த்த பொதுமக்கள் மற்றும்
சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழக - -ஆந்திர அரசுகள் இடையே, கடந்த 1983ம் ஆண்டு தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தம் போடப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும், ஜூலை - -ஆகஸ்ட் இடையே, 8 டி.எம்.சி.,
ஜனவரி - -ஏப்ரல் இடையே, 4 டி.எம்.சி., என, இரண்டு தவணைகளில், 12 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் தர வேண்டும்.
இதற்காக, கண்டலேறு அணையில் வெங்கடகிரி, ராப்பூர், காளஹஸ்தி, வரதயபாளையம், சத்தியவேடு வழியே, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட் வழியே, பூண்டி நீர்த்தேக்கம் வரை, 177 கி.மீட்டர் துாரத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டது.இந்த பணி, 13 ஆண்டுகளாக நடந்து, 1996ம் ஆண்டு முதல்முறையாக தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் வந்தது.
கால்வாய் உடைப்பு போன்ற காரணங்களால், கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு வர, 10 நாட்கள் ஆனது.
சத்ய சாய்பாபா டிரஸ்ட் மூலம் கால்வாய் சீரமைத்ததால், தண்ணீர் நான்கு நாட்களில் தமிழகம் வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு தமிழக எல்லையில் இருந்து, கால்வாயின் 3வது கி.மீட்டரில் உள்ள ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் முதல், 10வது கி.மீட்டரில் உள்ள ஆலப்பாக்கம் வரை இடைப்பட்ட பகுதிகளில், 6.5 கி.மீட்டர் அளவிற்கு கால்வாய் பெருமளவு சேதம் அடைந்துள்ளது.
சிமென்ட் சிலாப்புகள் சரிந்தும், உடைந்தும் உள்ளன. மேலும், முட்புதர்கள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது.
ரூ.24 கோடி ஒதுக்கீடு
சேதமடைந்த கால்வாய் பகுதிகளை சீரமைக்க தமிழக அரசு, 2020ம் ஆண்டு 24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. ஓராண்டு காலத்திற்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும்.
பணிகள் துவங்கிய போது கால்வாயில் தண்ணீர் சென்றதால் பணிகள் நடக்கவில்லை. மேலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முழு ஊரங்கு அமலில் இருந்ததால் பணிகள் நிறுத்தப்பட்டது. பின், கடந்தாண்டு பிப்., மாதம் மீண்டும் பணிகள் துவங்கின.
இப்பணிகள் இயந்திரம் மூலம் கால்வாயின் இரண்டு பக்கமும் சமதளப்படுத்தி, அதிகளவு ஆட்கள் கொண்டு பணிகள் நடந்தன. மொத்தம், 70 சதவீத பணிகள் முடிந்த நிலையில், கிருஷ்ணா நீர் வரத்தால் பணிகள் நிறுத்தப்பட்டன.
கால்வாய் சேதம்
கடந்த மாதம் 'மிக்ஜாம்' புயலால் பெய்த பலத்த மழையால், கால்வாயில் தண்ணீர் அதிகளவு சென்றது. இதில், அனந்தேரி பகுதியில் பாலத்தின் கீழே இரண்டு பக்கமும் சிமென்ட் சிலாப்புகள் சரிந்தன.
பணிகள் முடிந்த இடத்தில் பெய்த ஒரு மழைக்கே கால்வாய் சேதமடைந்ததை பார்த்த மக்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிருஷ்ணா நதிநீர் கால்வாய் பணிகள் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, 70 சதவீத பணிகள் முடிந்த நிலையில், கிருஷ்ணா நீர் வரத்தால் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன. கடந்த மாதம், 'மிக்ஜாம்' புயலால் அதிகளவு மழை பெய்து, கால்வாய் முழுதும் தண்ணீர் சென்றது. இதனால் கால்வாய் சரிந்தது. அடுத்த மாதம் முதல் மீண்டும் பணிகள் துவக்கப்படும். அப்போது, சேதமடைந்த பகுதிகள் மீண்டும் புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நீர்வள ஆதாரத்துறை அதிகாரி,
கிருஷ்ணா நீர்.