/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிருஷ்ணா நீர் வினாடிக்கு 281 கன அடி நீர் வரத்து
/
கிருஷ்ணா நீர் வினாடிக்கு 281 கன அடி நீர் வரத்து
ADDED : செப் 26, 2024 10:19 PM
ஊத்துக்கோட்டை:சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக, கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் கடந்த, 19ம் தேதி காலை, 11:00 மணிக்கு திறக்கப்பட்டது.
ராப்பூர், வெங்கடகிரி, காளஹஸ்தி, வரதயபாளையம், சத்தியவேடு வழியே சாய்கங்கை கால்வாயில், 152 கி.மீட்டர் துாரம் பயணித்து, 23ம் காலை, 9:00 மணிக்கு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்டை அடைந்தது.
அங்கிருந்து, 25 கி.மீட்டர் துாரமுள்ள பூண்டி நீர்த்தேக்கத்தை மறுநாள் காலை அடைந்தது. துவக்கத்தில், 500 கன அடி வீதம் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் தற்போது, 1,300 கன அடி வீதம் திறக்கப்பட்டு உள்ளது. நேற்று மதியம், 1:00 மணி நிலவரப்படி, கிருஷ்ணா நீர் ஜீரோபாயின்டிற்கு வினாடிக்கு, 281 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது.
பூண்டி நீர்த்தேக்கத்தில் நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 230 கன அடி வீதம் வந்து கொண்டு இருக்கிறது. மொத்த கொள்ளளவான, 3.23 டி.எம்.சி.,யில் தற்போது, 104 மில்லியன் கன அடி நீர் உள்ளது. மொத்த நீர்மட்டம், 35 அடி. தற்போது, 17.90 அடி. தொடர்ந்து நீர்மட்டம் உயரும் என நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.