/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டியை அடைந்தது கிருஷ்ணா நீர் புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
/
பூண்டியை அடைந்தது கிருஷ்ணா நீர் புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
பூண்டியை அடைந்தது கிருஷ்ணா நீர் புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
பூண்டியை அடைந்தது கிருஷ்ணா நீர் புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
ADDED : மார் 29, 2025 07:13 PM
ஊத்துக்கோட்டை:ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு, 68 டி.எம்.சி., தற்போது, 49 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது. இதனால், தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, கண்டலேறு அணையில் இருந்து, கடந்த 25ம் தேதி காலை 11:30 மணிக்கு வினாடிக்கு, 800 கன அடி நீர் திறக்கப்பட்டது.
அங்கிருந்து, சாய்கங்கை கால்வாயில், 152 கி.மீ., பயணித்து, நேற்று முன்தினம் காலை 9:30 மணிக்கு, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டை அடைந்தது. வினாடிக்கு, 52 கன அடி வந்த நீர், நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, 60 கன அடி வீதம் வருகிறது.
ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டில் இருந்து, 25 கி.மீ., துாரமுள்ள பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்திற்கு, நேற்று காலை 11:00 மணிக்கு சென்றது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி, பூண்டி நீர்த்தேக்கத்தில், 2.678 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம், 33.53 அடி.
இதை தொடர்ந்து, இணைப்பு கால்வாய் வாயிலாக, 350 கன அடி நீர் திறக்கப்பட்டு, சென்னை புழல் நீர்த்தேக்கத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.