/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பூண்டிக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம் கண்ணன்கோட்டைக்கு திறப்பு
/
பூண்டிக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம் கண்ணன்கோட்டைக்கு திறப்பு
பூண்டிக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம் கண்ணன்கோட்டைக்கு திறப்பு
பூண்டிக்கு கிருஷ்ணா நீர் நிறுத்தம் கண்ணன்கோட்டைக்கு திறப்பு
ADDED : ஆக 20, 2025 10:53 PM
ஊத்துக்கோட்டை:பூண்டி சத்தியமூர்த்திசாகர் நீர்த்தேக்கத்திற்கு கிருஷ்ணா நீர் நிறுத்தப்பட்ட நிலையில், கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய நீர்த்தேக்கங்கள் உள்ளன. தற்போது, கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கமும், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
இதன் மொத்த கொள்ளளவு, அரை டி.எம்.சி., நீர்மட்டம் 36.61 அடி. கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் கிருஷ்ணா நீர் மற்றும் மழைநீர் முக்கிய நீராதாரமாக உள்ளது.
தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தத்தின் மூலம், தற்போது கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.
கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு, 1,750 கன அடி நீர் திறந்த நிலையில், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோபாயின்ட்டிற்கு வினாடிக்கு, 530 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திற்கு சென்று கொண்டிருந்த கிருஷ்ணா நீர், நேற்று முன்தினம் மாலை முதல் நிறுத்தப்பட்டது.
கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்திற்கு, நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு, 20 கன அடி வீதம் கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. பின், படிப்படியாக அதிகரித்து, 400 கன அடி வீதம் சென்று கொண்டிருக்கிறது.
தற்போதைய கொள்ளளவு, 306 மில்லியன் கன அடி. நீர்மட்டம் 30.41 அடி. கிருஷ்ணா நீர் சென்று கொண்டிருப்பதால், விரைவில் நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.