/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பங்குச்சந்தை ஆசைகாட்டி ரூ.45 லட்சம் மோசடி கிருஷ்ணகிரி எம்.பி.ஏ., பட்டதாரிக்கு 'காப்பு'
/
பங்குச்சந்தை ஆசைகாட்டி ரூ.45 லட்சம் மோசடி கிருஷ்ணகிரி எம்.பி.ஏ., பட்டதாரிக்கு 'காப்பு'
பங்குச்சந்தை ஆசைகாட்டி ரூ.45 லட்சம் மோசடி கிருஷ்ணகிரி எம்.பி.ஏ., பட்டதாரிக்கு 'காப்பு'
பங்குச்சந்தை ஆசைகாட்டி ரூ.45 லட்சம் மோசடி கிருஷ்ணகிரி எம்.பி.ஏ., பட்டதாரிக்கு 'காப்பு'
ADDED : பிப் 16, 2025 03:42 AM

ஆவடி:பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என ஆசைகாட்டி, 45 லட்சம் சுருட்டிய எம்.பி.ஏ., பட்டதாரி கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம், புட்லுார் பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா, 38. இவர், கடந்த 2021ல், 'வாட்ஸாப்' எண்ணில் வந்த பங்குச்சந்தை தொடர்பான 'போரெக்ஸ் டிரேடிங்' எனும் விளம்பரத்தை கண்டு, அதில் கொடுக்கப்பட்டு இருந்த மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அதில் பேசிய நபர் குறுகிய நாட்களில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளார். மேலும், 'கபானா கேப்பிடல்' என்ற 'ஆன்லைன்' பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என, தெரிவித்துள்ளார்.
அவரது பேச்சை நம்பிய சங்கீதா, அவர் சொன்ன கணக்கிற்கு முதலில் சிறிய தொகை அனுப்பி உள்ளார். அதில் தொகைக்கேற்ற சிறிய கமிஷன் பெற்றுள்ளார்.
இது அவரது நம்பிக்கையை மேலும் அதிகரித்தது. அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், பல தவணைகளாக 45 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார். ஆரம்பத்தில் ஓரிரு நாள் கமிஷன் வந்துள்ளது.
அதன்பின் பணம் வரவில்லை. முதலீட்டு ஆசைகாட்டிய நபரின் எண்ணிற்கும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை சங்கீதா உணர்ந்தார். இது குறித்து ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
இது குறித்து, 'சைபர் கிரைம்' இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்தனர். இதில்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி.ஏ., பட்டதாரியான முரளி மோகன், 34, என்பவர், சங்கீதாவிடம் முதலீடு பெற்று ஏமாற்றியது தெரிய வந்தது. இதேபோன்று பலரிடம் அவர் மோசடியில் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்தது.
மேலும், தற்போது தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் தொழில் செய்து வந்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.