/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வள்ளிமலையில் கிருத்திகை உற்சவம்
/
வள்ளிமலையில் கிருத்திகை உற்சவம்
ADDED : ஏப் 29, 2025 11:33 PM

வள்ளிமலை, வேலுார் மாவட்டம், பொன்னை அருகே அமைந்துள்ளது வள்ளிமலை. வள்ளிமலை அடிவாரம் மற்றும் மலை உச்சியில் வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி அருள்பாலித்து வருகிறார். வள்ளியை முருகப்பெருமான் கவர்ந்த தல வரலாறு கொண்டது இத்தலம் என்பதால், ஏராளமான பக்தர்கள் இங்கு வருகின்றனர்.
இங்கு, சித்திரை மாத கிருத்திகையான நேற்று காலை 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அதேபோல், பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் கஜகிரி செங்கல்வராயன் மலைக்கோவிலில் நேற்று, சித்திரை கிருத்திகை உற்சவம் கோலாகலமாக நடந்தது. மலைக்கோவிலில் காலை 8:00 மணிக்கு உற்சவர் மற்றும் மூலவர் செங்கல்வராய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.
பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை மற்றும் ஆந்திர மாநிலம் நகரி, நாராயணவனம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.