/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கொள்ளாபுரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
/
கொள்ளாபுரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED : மே 14, 2025 10:43 PM
திருத்தணி,:திருத்தணி அடுத்த செருக்கனுார் புதிய காலனி பகுதியில், புதிதாக கொள்ளாபுரியம்மன் கோவில் கட்டப்பட்டது. நேற்று முன்தினம் கணபதி மற்றும் நவக்கிரக ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.
இதற்காக, கோவில் வளாகத்தில் மூன்று யாகசாலை, 108 கலசங்கள் வைத்து யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு நான்காம் யாக சாலை பூஜை மற்றும் கலச ஊர்வலம் நடந்தது.
தொடர்ந்து, காலை 6:30 மணிக்கு மூலவர் அம்மனுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின், மூலவர் அம்மனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. கோவில் வளாகத்தில் திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இரவு 7:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்தார்.