/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கந்தஸ்வாமி கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
/
கந்தஸ்வாமி கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஏப் 10, 2025 02:32 AM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் ஊராட்சியில் அரசு பள்ளி சாலையில் கந்தஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பின் கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 6ம்தேதி காலை 8:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் விழா துவங்கியது. 7ம் தேதி மாலை 5:30 மணிக்கு முதல் யாகசாலை பூஜையும், நேற்று முன்தினம் காலை 8:30 மணிக்கு இரண்டாம் யாகசாலை பூஜையும், மாலை 5:30 மணிக்கு மூன்றாம் யாக சாலை பூஜையும் நடந்தது.
நேற்று காலை 8:30 மணிக்கு மஹா பூர்ணாஹூதி வழங்கப்பட்டு, 9:00 மணிக்கு கடம் புறப்பாடு நடந்தது. இதையடுத்து, 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், மணவூர், திருவாலங்காடு, சின்னம்மாபேட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

