/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அத்திமாஞ்சேரிபேட்டையில் சிவன் கோவில் கும்பாபிஷேகம்
/
அத்திமாஞ்சேரிபேட்டையில் சிவன் கோவில் கும்பாபிஷேகம்
அத்திமாஞ்சேரிபேட்டையில் சிவன் கோவில் கும்பாபிஷேகம்
அத்திமாஞ்சேரிபேட்டையில் சிவன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜன 24, 2024 11:50 PM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த அத்திமாஞ்சேரிபேட்டை, காந்தி நகரில், விசாலாட்சி உடனுறை விஸ்வநாதர் கோவில் புதிதாக கட்டப்பட்டது.
கிராமத்தின் கிழக்கு பகுதியில் கோவில் கட்டுமான பணி சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து, நேற்று காலை 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதற்கான யாகசாலை பூஜை, கடந்த 22ம் தேதி காலை துவங்கியது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
நேற்று காலை 9:00 மணிக்கு, யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள், கோவில் கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. 9:15 மணிக்கு, கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதில், காந்தி நகர், அண்ணா நகர், அத்திமாஞ்சேரிபேட்டை, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.