/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புண்ணிய கோட்டீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
/
புண்ணிய கோட்டீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
புண்ணிய கோட்டீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
புண்ணிய கோட்டீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED : ஜூலை 03, 2025 02:39 AM

திருமழிசை:திருமழிசை அம்மை மரகதாம்பிகை சமேத புண்ணிய கோட்டீஸ்வரர் கோவிலில், நேற்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
திருமழிசை பேரூராட்சியில் அம்மை மரகதாம்பிகை சமேத புண்ணிய கோட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக விழா கடந்த 26ம் தேதி பந்தக்கால் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 8:00 மணிக்கு சதாசிவ வழிபாடும் நடந்தது.
கும்பாபிஷேக நாளான நேற்று காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜையும், காலை 10:10 மணிக்கு விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகமும் நடந்தது.
மதியம் 12:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையும், மாலை 6:00 மணிக்கு அம்மையப்பர் - மரகதாம்பிக்கு திருக்கல்யாணமும், இரவு வீதியுலாவும் நடந்தது.