/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பார்க்கிங் பகுதியாக மாறிய கும்மிடி பேருந்து நிலையம்
/
பார்க்கிங் பகுதியாக மாறிய கும்மிடி பேருந்து நிலையம்
பார்க்கிங் பகுதியாக மாறிய கும்மிடி பேருந்து நிலையம்
பார்க்கிங் பகுதியாக மாறிய கும்மிடி பேருந்து நிலையம்
ADDED : அக் 27, 2024 01:25 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்து, ஷேர் ஆட்டோக்கள், கார்கள், வேன்கள் உள்ளிட்ட தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால், கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம், தனியார் வாகன பார்க்கிங் பகுதி போல் எப்போதும் காட்சியளிக்கிறது.
கும்மிடிப்பூண்டி நகருக்குள் வரும் பேருந்துகள், பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து வெளியே வர முடியாத நெருக்கடியான சூழல் நிலவி வருகிறது. மிகுந்த சிரமத்திற்கு இடையே பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், உள்ளே வர வேண்டிய பேருந்துகள் பல, பேருந்து நிலைய நுழைவாயிலில், ஜி.என்.டி., சாலையோரம் நின்று பயணியரை இறக்கி, ஏற்றி செல்கின்றன.
அலைக்கழிப்புக்கு ஆளாகும் பேருந்து பயணியர், ‛இது பேருந்து நிலையமா அல்லது தனியார் வாகன பார்க்கிங் வளாகமா?' என்ற அதிருப்தியில் உள்ளனர். பேருந்து பயணியரின் நலன் கருதி, தனியார் வாகன ஆக்கிரமிப்பில் இருந்து கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தை மீட்டு, அனைத்து பேருந்துகளும் தாராளமாக உள்ளே சென்று வர, கும்மிடிப்பூண்டி போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணியர் எதிர்ப்பார்க்கின்றனர்.