/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி தீயணைப்பு நிலைய சுவர் எந்த நேரமும் இடிந்து விழும் நிலை
/
கும்மிடி தீயணைப்பு நிலைய சுவர் எந்த நேரமும் இடிந்து விழும் நிலை
கும்மிடி தீயணைப்பு நிலைய சுவர் எந்த நேரமும் இடிந்து விழும் நிலை
கும்மிடி தீயணைப்பு நிலைய சுவர் எந்த நேரமும் இடிந்து விழும் நிலை
ADDED : நவ 02, 2024 02:11 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி, ரெட்டம்பேடு சாலையில், போலீஸ் நிலையம் அருகே தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் இயங்கி வருகிறது.
தீயணைப்பு நிலையத்தின் மேற்கு பக்க மதில் சுவர், ஏழு ஆண்டுக்கு முன் இடிந்து விழுந்தது. அதனால் முகப்பு சுவர், பிடிமானம் இன்றி இருந்தது. விழுந்த தடுப்பு சுவருக்கு மாற்றாக, புதிய சுவர் அமைக்கப்படவில்லை.
சில ஆண்டுகளாக, முகப்பு சுவரும் பலம் இழந்து, சாய துவங்கியது. தற்போது, எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் அந்த சுவர் உள்ளது.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தை, பாதுகாப்பற்ற சூழலில் இருந்து மீட்டெடுக்க வேண்டும்; தீயணைப்பு நிலையத்தை சுற்றி புதிதாக மதில் சுவர் அமைக்க வேண்டும்.