/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நடைமேடையில் கட்டுமான பணிகள் சிரமத்தில் கும்மிடி ரயில் பயணியர்
/
நடைமேடையில் கட்டுமான பணிகள் சிரமத்தில் கும்மிடி ரயில் பயணியர்
நடைமேடையில் கட்டுமான பணிகள் சிரமத்தில் கும்மிடி ரயில் பயணியர்
நடைமேடையில் கட்டுமான பணிகள் சிரமத்தில் கும்மிடி ரயில் பயணியர்
ADDED : பிப் 02, 2024 10:49 PM

கும்மிடிப்பூண்டி:மத்திய ரயில்வே துறை சார்பில், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை, 25 கோடி ரூபாய் செலவில் நவீன மயமாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது, இரண்டாவது நடைமேடையில் பள்ளம் எடுத்து குழாய் பதிப்பு உள்ளிட்ட கட்டுமான பணி நடந்து வருகிறது.
பொதுவாக இரண்டாவது நடைமேடையில், ஆந்திர மாநிலம் சூளூர்ப்பேட்டை மற்றும் நெல்லுாரில் இருந்து இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்வது வழக்கம்.
கட்டுமான பணிகளால் ரயில் பயணியர் அந்த நடைமேடையில் நடமாட முடியாத நிலையில் பாதுகாப்பற்று காணப்படுகிறது.
இதனால், அந்த நடைமேடையில் ரயில் வரும்போது, பயணியர் தடுமாற்றத்துடன் ரயிலில் இறங்கி ஏற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ரயில் வரும் போது, ரயில் பயணியர் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுகிறது.
அந்த நடைமேடையில் கட்டுமான பணிகள் முடிவு பெறும் வரை, முதலாவது நடைமேடையில் மேற்கண்ட ரயில்களை இயக்க வேண்டும். அதன் மூலம் ரயில் பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

