/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குப்பை, கழிவுநீர் குட்டையாக மாறிய கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி
/
குப்பை, கழிவுநீர் குட்டையாக மாறிய கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி
குப்பை, கழிவுநீர் குட்டையாக மாறிய கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி
குப்பை, கழிவுநீர் குட்டையாக மாறிய கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி
ADDED : செப் 29, 2024 12:45 AM

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி நகரில், 48 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது தாமரை ஏரி, பொதுப்பணித் துறையின் நீர்வளத் துறையினர் பராமரிப்பில் உள்ளது. நகரின் ஒரே நீராதாரம் தற்போது குப்பை மற்றும் கழிவுநீரின் குட்டையாக மாறி வருகிறது.
குளத்தில், டேங்கர் லாரி கழிவுநீர், தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதால் ஏரி நீர் மாசு அடைந்து, ஏரி முழுதும் ஆகாய தாமரை படர்ந்துள்ளது.
ஏரியை சுற்றி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி மற்றும் பெத்திக்குப்பம் ஊராட்சியின் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. அதன் திடக்கழிவுகள் ஏரியை சுற்றி குவிப்பதும், கழிவுநீரை நேரடியாக ஏரியில் திறந்து விடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதனால் தாமரை ஏரியின் உட்புறமும் வெளிபுறமும் முற்றிலும் மாசு அடைந்து உள்ளது. தாமரை ஏரியை மீட்டெடுக்க வேண்டும், அதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், நீர்வளத் துறையினரும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.