/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குண்ணம்மஞ்சேரி ஆற்று பாலம் சேதம் பலவீனம் அடையும் முன் சீரமைப்பரா?
/
குண்ணம்மஞ்சேரி ஆற்று பாலம் சேதம் பலவீனம் அடையும் முன் சீரமைப்பரா?
குண்ணம்மஞ்சேரி ஆற்று பாலம் சேதம் பலவீனம் அடையும் முன் சீரமைப்பரா?
குண்ணம்மஞ்சேரி ஆற்று பாலம் சேதம் பலவீனம் அடையும் முன் சீரமைப்பரா?
ADDED : செப் 27, 2024 01:04 AM

பொன்னேரி:பொன்னேரி - குண்ணம்மஞ்சேரி பகுதிகளுக்கு இடையே ஆரணி ஆறு செல்கிறது. குண்ணம்மஞ்சேரி, ஏலியம்பேடு, புதுவாயல், இந்திரா நகர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் கல்வி, சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளுக்கு ஆற்றை கடந்து, பொன்னேரிக்கு வந்து செல்கின்றனர்.
இக்கிராம வாசிகளின் தொடர் கோரிக்கையின் பயனாக, 2016ல் ஆரணி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க, ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சியின் நிதியின் கீழ், 12.30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, ஆற்றின் குறுக்கே 200 மீ., நீளம், 12 மீ., அகலத்தில் ஓடுபாதையும், இருபுறமும் 300 மீ., நீளத்திற்கு இணைப்பு சாலைகளும் அமைக்கப்பட்டு, 2020ல் பயன்பாட்டிற்கு வந்தது.
நான்கு ஆண்டுகளாக இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பாலத்தின் மேற்பகுதியில், ஆங்காங்கே கான்கிரீட் தளங்கள் சேதமடைந்து உள்ளன.
சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து, உள்ளிருக்கும் இரும்பு கம்பிகள் வெளியே தெரிவதால் மழைக்காலங்களில், அதன் வழியாக தண்ணீர் செல்கிறது. இதனால் இரும்பு கம்பிகள் துருப்பிடித்து பாலத்தின் உறுதி தன்மை பாதிக்கும் அபாயம் உள்ளது.
பாலம் சேதமடைந்து இருப்பது, அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சேதமடைந்த பகுதிகளில் உள்ள இரும்பு கம்பிகளால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, பாலம் பலவீனம் அடையும் முன், நெடுஞ்சாலைத் துறையினர், சேதமடைந்த பகுதிகளில் நிரந்தர சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.