/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆறே மாதத்தில் சேதமான கூடப்பாக்கம் சாலை
/
ஆறே மாதத்தில் சேதமான கூடப்பாக்கம் சாலை
ADDED : ஜன 24, 2024 12:30 AM

திருவள்ளூர்:திருமழிசை அடுத்துள்ளது நேமம் ஊராட்சி. இங்கிருந்து கூடப்பாக்கம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்தது.
இந்த சாலை கடந்த 2019-20ம் ஆண்டு சீரமைக்க 25 லட்சம் ரூபாய் செலவில் முடிவு செய்யப்பட்டு கடந்த ஆறு மாதங்களுக்கு சீரமைக்கப்பட்டது.
சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்ட நிலையில் தற்போது சாலை இடங்களில் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது.
சாலை சீரமைப்பின்போது ஒன்றிய அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாததே காரணம் என, பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். 25 லட்சம் ரூபாய் மதிப்பீல் சீரமைக்கப்பட்ட சாலை ஆறே மாதத்தில் சேதமடைந்தது பகுதிவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் நேமம் பகுதியில் தரமற்ற முறையில் சாலை சீரமைக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்து சாலை சீரமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கவும் சேதமடைந்த சாலையை ஆய்வு செய்து சீரமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

