ADDED : பிப் 19, 2025 06:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து, டூ - -வீலரில் வந்த ஒருவரை சோதனையிட்டனர்.
அவரிடம், 20 கிலோ எடை, குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதை கடத்திய, சென்னை கொளத்துார் பகுதியைச் சேர்ந்த ராமசாமி, 65, என்பவரை கைது செய்தனர். ஆரம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

