/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணியில் தொழிலாளர் பாதுகாப்பு கேள்விக்குறி
/
மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணியில் தொழிலாளர் பாதுகாப்பு கேள்விக்குறி
மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணியில் தொழிலாளர் பாதுகாப்பு கேள்விக்குறி
மீஞ்சூர் ரயில்வே மேம்பால பணியில் தொழிலாளர் பாதுகாப்பு கேள்விக்குறி
ADDED : பிப் 01, 2025 12:54 AM

மீஞ்சூர்:மீஞ்சூர் - நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, எல்.சி., 16 ரயில்வே கேட் அமைந்துள்ளது.
இந்த ரயில்வே கேட் வழியாக, காட்டூர் - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள, 70 கிராமங்களை சேர்ந்தவர்கள் கடந்து செல்கின்றனர்.
வாகன ஓட்டிகளின் சிரமங்களை தவிர்க்க, 2016ல் சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், மேற்கண்ட ரயில்வே கேட்டின் அருகே, 55 கோடி ரூபாயில், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
தற்போது, பாலத்தின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கான கான்கிரீட் துாண்கள், மழைநீர் கால்வாய் உள்ளிட்ட பணிகள் நடைபெறும் நிலையில், அதில் ஈடுபடும் தொழிலாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பணிபுரிகின்றனர்.
இதனால், அவர்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக, சமூக ஆர்வலர்கள் அதிருப்தியுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:
கட்டுமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள், தலைக்கவசம், கையுறை உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டும்.
உயரமான இடங்களில் பணிபுரியும் போது, தேவையான பாதுகாப்பு சாதனங்களை வைத்திருக்க வேண்டும்.
இவை, எதுவும் இல்லாமல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அசம்பாவிதங்களை தவிர்க்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.