ADDED : ஜூன் 15, 2025 08:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே, நாயுடுகுப்பம் கிராமத்தில் வசித்தவர் குமார், 23; கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, செங்குன்றம் நோக்கி பைக்கில் சென்றுக் கொண்டிருந்தார்.
கவரைப்பேட்டை மேம்பாலத்தில் சென்றபோது, முன்னால் சென்ற லாரியின் மீது மோதியது. படுகாயமடைந்தவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.