UPDATED : நவ 10, 2026 09:17 AM
ADDED : நவ 10, 2026 09:14 AM
அ நிறம் | அளவு
ஊத்துக்கோட்டை: நடந்து சென்ற கூலித் தொழிலாளி சேகர், 56, என்பவர், டிராக்டர் மோதி உயிரிழந்தார்.
பென்னலுார்பேட்டை அடுத்த, பாப்புரெட்டிகண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர், 56. திருவள்ளூரில் உள்ள ஹோட்டலில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை இவர் வேலை முடித்து கூனிப்பாளையம் பேருந்து நிலையம் வந்தடைந்தார்.
அங்கிருந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த டிராக்டர் இவர் மீது மோதியது. இந்த விபத்தில் சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பென்னலுார்பேட்டை போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சேகர் மனைவி விஜயா, 46, அளித்த புகாரின்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.
