/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பின்றி லட்சுமிபுரம் சிறுபாலம்
/
பராமரிப்பின்றி லட்சுமிபுரம் சிறுபாலம்
ADDED : டிச 05, 2024 11:24 PM

பொன்னேரி,பொன்னேரி - பெரும்பேடு மாநில நெடுஞ்சாலையில், லட்சுமிபுரம் பகுதியில் சிறுபாலம் உள்ளது. லட்சுமிபுரம் அணைக்கட்டில் இருந்து, பெரும்பேடு ஏரிக்கு மழைநீர் கொண்டு செல்லும் கால்வாயின் குறுக்கே அமைந்துள்ள இந்த பாலம் உரிய பராமரிப்பு இன்றி கிடக்கிறது.
பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் உடைந்தும், விரிசல்கள் ஏற்பட்டும் இருக்கிறது. துாண்களில் செடிகள் வளர்ந்து, அதன் உறுதி தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
பாலம் பராமரிப்பு இன்றி இருப்பதால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்திற்கு ஆளாகின்றனர். இந்த பாலத்தின் வழியாக பெரும்பேடு, கம்மவார்பாளையம், மத்ரவேடு, மனோபுரம், ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட, 20க்கும் அதிகமான கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பயணிக்கின்றனர்.
அரசு பேருந்துகள், செங்கல் சூளைகளுக்கு செல்லும் லாரிகள், பெரும்பேடு முத்துகுமாரசாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வாகனங்கள் என, தொடர் போக்குவரத்து இருக்கிறது.
பாலம் பலவீனம் அடைந்து சேதம் அடைந்தால், 20 கிராமங்களின் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை உள்ளது.
மேற்கண்ட பாலத்தை புதுப்பிக்க, நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.