/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிங்கிள் காலம் வி.ஏ.ஓ.,க்களுக்கு நில அளவை பயிற்சி
/
சிங்கிள் காலம் வி.ஏ.ஓ.,க்களுக்கு நில அளவை பயிற்சி
ADDED : ஏப் 29, 2025 11:40 PM

திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில், ஒன்பது தாலுகாக்களில், 48 பிர்கா அமைந்துள்ளன. அவற்றில், 780 வருவாய் கிராமங்கள் அமைந்துள்ளன. இம்மாவட்டத்தில், சமீபத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக பணியாளர் பணியிடத்திற்கு, தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக, 34 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் கடந்த வாரம், கலெக்டர் பிரதாப் பணி நியமன ஆணை வழங்கினார். இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்ற கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, அவர்களின் பணி குறித்து வருவாய் துறையினர் பயிற்சி அளித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில், புதிதாக நியமனம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, நில அளவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுபோல், பல்வேறு துறைகள் குறித்து, ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படும் என, வருவாய் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

