/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஏலச்சீட்டு நடத்தி ரூ.30 லட்சம் மோசடி விசாரணைக்கு வந்த வக்கீல் ஓட்டம்

ADDED : அக் 25, 2024 08:49 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் பெரியார் நகர் ராஜாஜிபுரத்தை சேர்ந்தவர் ஹரிஹரன், 35. வழிக்கறிஞராக பணிபுரிந்து வரும் இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார்
இவரிடம் திருவள்ளூர் பெரியகுப்பம் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த ராஜேஸ்வரி, 40 என்பவர் தனக்கு தெரிந்த 10 நபர்களிடமிருந்து மாதம் 1.50 லட்சம் ரூபாய் வீதம் 20 மாதங்களாக ரூ.30 லட்சம் ரூபாய் கட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் 2022 ஆகஸ்ட் மாதம் சீட்டு முடிந்தும் பணம் கட்டிய நபர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஹரிகரன் ஏமாற்றி வந்தார்.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த மாதம் 12ம் தேதி திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். 24ம் தேதி எஸ்,பி., அலுவலகத்தில் ஹரிஹரன் மற்றும் ராஜேஸ்வரி என இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து வந்தனர்.
அப்போது திடீரென ஹரிஹரன் அங்கிருந்து வெளியேறினார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் எஸ்.பி., அலுவலக நுழை வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.