/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி, திருத்தணியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
/
பொன்னேரி, திருத்தணியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 21, 2025 12:46 AM

பொன்னேரி:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் வக்கீல் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை, திருவண்ணாமலையில் மற்றொரு வக்கீல் வெட்டிக்கொலை ஆகிய சம்பவங்களை கண்டித்து, பொன்னேரி மற்றும் திருத்தணியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொன்னேரி சார்பு நீதிமன்றம் எதிரே வக்கீல்கள் படுகொலைகளை கண்டித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், நீதியை நிலைநிறுத்த போராடும் வக்கீல்களுக்கு, தமிழக அரசு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். மிரட்டல் உள்ள வக்கீல்களின் பாதுகாப்பிற்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதேபோல், திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், நேற்று காலை நீதிமன்ற வளாகம் முன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கும்மிடிப்பூண்டி வக்கீல்கள் சங்கத்தினர் சார்பில், நீதிமன்றம் முன் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் சம்பத் தலைமையில், 30க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.