/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
/
திருத்தணியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 24, 2025 12:17 AM

திருத்தணி: குடிநீர் கேட்டு போராட்டம் நடத்திய வக்கீலை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி வக்கீல்கள் நேற்று திருத்தணியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருத்தணி ஒன்றியம் முருக்கம்பட்டு கிராமத்தில், 20 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு என கடந்த, 20ம் தேதி அப்பகுதி மக்கள், 75க்கும் மேற்பட்டோர் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் அய்யப்பன் வக்கீல் என்பவரும் பங்கேற் றார். சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி போலீசார், மறியலை கைவிடுமாறு பேச்சு வார்த்தை நடத்திய போது, வக்கீல், அய்யப்பன், இன்ஸ்பெக்டர் மதியரசன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அங்கிருந்த தலைமை காவலர் ஒருவர் வக்கீலை தாக்கி இழுத்து சென்றார்.
திருத்தணி போலீசார், வக்கீல் அய்யப்பன் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று வக்கீல் அய்யப்பனுக்கு ஆதரவாக திருத்தணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள், 50க்கும் மேற்பட்டோர் நீதிமன்ற நுழைவு வாசலில் போலீசாரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது வக்கீலை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோஷம் எழுப்பினர். திருத்தணி டி.எஸ்.பி., கந்தன், பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, வக்கீல்கள் கலைந்து சென்றனர்.

