/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நுாலக விரிவாக்க கட்டடம் திறப்பு
/
நுாலக விரிவாக்க கட்டடம் திறப்பு
ADDED : செப் 04, 2025 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை பொன்னியம்மன் கோவில் அருகே முழு நேர கிளை நுாலகம் செயல்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக குறுகிய கட்டடத்தில் செயல்பட்டு வரும் இந்த நுாலகத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாசகர்களாக உள்ளனர்.
இந்த நுாலகத்தில் கூடுதல் இடவசதி வேண்டும் என்ற வாசகர்களின் வேண்டுகோளின் படி, கூடுதல் கட்டடமாக தற்போதைய நுாலகத்தில் அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு வந்தது. கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று காலை இந்த கட்டடம், வாசகர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.