/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புட்லுார் ரயில் நிலையத்தில் 'லிப்ட்' பயணியர் சங்கம் வேண்டுகோள்
/
புட்லுார் ரயில் நிலையத்தில் 'லிப்ட்' பயணியர் சங்கம் வேண்டுகோள்
புட்லுார் ரயில் நிலையத்தில் 'லிப்ட்' பயணியர் சங்கம் வேண்டுகோள்
புட்லுார் ரயில் நிலையத்தில் 'லிப்ட்' பயணியர் சங்கம் வேண்டுகோள்
ADDED : செப் 18, 2024 09:03 PM
திருவள்ளூர்:புட்லுார் ரயில் நிலையத்தில், நடைமேம்பாலம் உயரமாக உள்ளதால், முதியோர், பெண்கள் வசதிக்காக 'லிப்ட்' அமைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில், திருவள்ளூருக்கு முன்னதாக புட்லுார் ரயில் நிலையம் அமைந்துள்ளது. புட்லுார் ரயில் நிலையம் அருகே, பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி கோவில், காக்களூர் தொழிற்பேட்டை உள்ளது.
இங்கிருந்து, தினமும் 10,000க்கும் மேற்பட்டோர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அதேபோல், பல்வேறு இடங்களில் இருந்தும், கோவில் மற்றும் காக்களூர் தொழிற்பேட்டைக்கு, தினமும் 1,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
ஐந்து மாதங்களுக்கு முன், புட்லுாரில் நான்கு தண்டவாளங்களையும் கடக்கும் வகையில் நடைமேம்பாலம் நீட்டிக்கப்பட்டது. இந்த நடைமேம்பாலம் உயரமாக இருப்பதால் வயதானோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, முதியோர் மற்றும் பெண்கள் வசதிக்காக, நடைமேடையின் இருபுறமும் 'லிப்ட்' வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என, புட்லுார் ரயில் பயணியர் சங்கத்தினர், சென்னை கோட்ட ரயில்வே நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.