ADDED : ஜன 11, 2025 11:47 PM

பொன்னேரி:பொன்னேரி ரயில் நிலையத்தில் இருந்து, வேண்பாக்கம் வழியாக, திருவேங்கிடபுரம் பகுதிக்கு செல்லும் சாலையின் ஓரங்களில் கம்பங்களில் மின்விளக்கு பொருத்தப்பட்டிருந்தன.
அவை தற்போது, தொடர் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு இன்றி கிடக்கின்றன. கம்பங்களில் மின்விளக்கு இல்லாமலும், இருப்பவை உடைந்தும், புதர் சூழ்ந்தும் இருக்கின்றன.
மின் விளக்குகளுக்கான மின்சாதனங்களும் பராமரிப்பு இன்றி கிடக்கின்றன. மின்விளக்குகள் எரியாததால், இரவு நேரங்களில் வேண்பாக்கம் ரயில் நிலைய சாலை இருண்டு கிடக்கிறது. இதனால் ரயில் நிலையத்திற்கு சென்று வரும் பயணியர் அச்சத்திற்கு ஆளாகின்றனர்.
குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் பணி முடிந்து வீடு திரும்பும் பெண்கள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
ரயில் நிலைய சாலையில் உள்ள மின்விளக்குகள், அதன் மின்சாதனங்களையும் உரிய முறையில் ரயில்வே நிர்வாகம் பராமரிக்க வேண்டும் என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

