/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்னல் தாக்கி வீடு சேதம் 'டிவி' வெடித்து பெண் காயம்
/
மின்னல் தாக்கி வீடு சேதம் 'டிவி' வெடித்து பெண் காயம்
மின்னல் தாக்கி வீடு சேதம் 'டிவி' வெடித்து பெண் காயம்
மின்னல் தாக்கி வீடு சேதம் 'டிவி' வெடித்து பெண் காயம்
ADDED : ஆக 07, 2025 02:18 AM

திருவாலங்காடு:மணவூரில், வீட்டின் கூரை மீது மின்னல் தாக்கி, வீட்டின் கூரை சேதமடைந்ததுடன் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட மணவூர், பழையனுார், பாகசாலை உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து, பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது.
அப்போது, மணவூர் காலனி அம்பேத்கர் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளியான ஏழுமலை, 47, என்பவரின் வீட்டின் கூரையில், மின்னல் தாக்கியது.
இதில், கூரை சேதமடைந்ததுடன், வீட்டில் இருந்த மின் இணைப்பு ஒயர்கள் எரிந்து நாசமாகின. வீட்டு உபயோக பொருட்களான 'ஏசி' 'டிவி' மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் சேதமாகின.
இதில், 'டிவி' வெடித்ததில், அதனருகே படுத்திருந்த ஏழுமலையின் மனைவி நாகஜோதி காயமடைந்தார். அவரை மீட்ட உறவினர்கள், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மின்னல் தாக்கியதில், ஏழுமலை வீட்டின் அருகே உள்ள ஐந்து வீடுகளிலும், மின்விசிறி, பிரிஜ், வாஷிங்மிஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் சேதமடைந்தன.