/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி மலை இலவச கழிப்பறை கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் தேங்குவதால் நோய் அபாயம்

ADDED : ஆக 07, 2025 02:16 AM

திருத்தணி:முருகன் மலைக்கோவில் அருகே உள்ள இலவச கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ராஜிவ்காந்தி நகர் குடியிருப்பு பகுதியில் குளம்போல் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் வசிப்போருக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
திருத்தணி நகராட்சி, 10வது வார்டு, ராஜிவ்காந்தி தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, நகராட்சி நிர்வாகம் முறையாக மழைநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தவில்லை. இதனால், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, குடியிருப்புகளில் கழிவுநீர் குளம்போல் தேங்கியுள்ளது.
அதாவது, முருகன் மலைக்கோவில் அருகே உள்ள இலவச கழிப்பறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மலைப்பகுதியில் இருந்து ராஜிவ்காந்தி தெரு பகுதியில் தேங்கி நிற்கிறது.
தேங்கியுள்ள கழிவுநீர், வெளியே செல்வதற்கு வழியில்லாததால், அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, நோய் பரவும் அபாயம் உள்ளது. வீடுகளை சுற்றியும் கழிவுநீர் சூழ்ந்துள்ளதால், குடியிருப்பு பகுதியில் பன்றிகள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, இப்பகுதியில் வசிப்போர் பலமுறை நகராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும், தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, கலெக்டர் நேரில் வந்து பார்வையிட்டு, ராஜிவ்காந்தி தெரு குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்ற, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியில் வசிப்போர் வலியுறுத்தி வருகின்றனர்.