/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இணைப்பு சாலை சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி
/
இணைப்பு சாலை சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி
ADDED : மே 13, 2025 09:13 PM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து அம்மையார்குப்பம் செல்லும் சாலையில், ஆறு குறுக்கிடுகிறது. இந்த ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த தரைப்பாலம், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன் பின் ஜல்லிகற்கள் கொட்டப்பட்டு, இணைப்பு சாலை ஏற்படுத்தப்பட்டது. ஆனால், முறையாக தார் சாலை அமைக்கப்படவில்லை. இதனால் இந்த வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த பாலத்தை கடந்து அம்மயைார்குப்பம், பாலாபுரம், கதனநகரம், ஜனகராஜகுப்பம் மற்றும் ஆந்திர மாநிலம், பாலசமுத்திரம் மண்டல பகுதிவாசிகள் தினசரி ஆர்.கே.பேட்டைக்கு பயணித்து வருகின்றனர். குண்டும், குழியுமான சாலையில் பயணிக்கும் வாகனங்கள், நிலை தடுமாறி விபத்தில் சிக்கி வந்தன.
இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து தற்போது இந்த பாலத்தின் இணைப்பு சாலை தார் மற்றும் ஜல்லி கொண்டு சீரமைக்கப்பட்டுள்ளது.