/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூரில் இணைப்பு சாலை பணி அம்பேத்கர் சிலை இடமாற்றம்
/
மீஞ்சூரில் இணைப்பு சாலை பணி அம்பேத்கர் சிலை இடமாற்றம்
மீஞ்சூரில் இணைப்பு சாலை பணி அம்பேத்கர் சிலை இடமாற்றம்
மீஞ்சூரில் இணைப்பு சாலை பணி அம்பேத்கர் சிலை இடமாற்றம்
ADDED : ஜூலை 23, 2025 02:16 AM

மீஞ்சூர்:மீஞ்சூரில் ரயில்வே மேம்பாலத்திற்கான இணைப்பு சாலை அமைக்கும் பணி நடைபெறும் இடத்தில் இருந்த அம்பேத்கர் சிலை இடமாற்றம் செய்யப்பட்டது.
சென்னை - கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ள மீஞ்சூர் -- நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, காட்டூர் மாநில நெடுஞ்சாலையில், ரயில்வே கேட் அமைந்துள்ளது.
கடந்த 2019ல், ரயில்வே எல்லையில் பாலம் அமைக்கப்பட்டது. கடந்தாண்டு, சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், 67.95 கோடி ரூபாயில், ரயில்வே மேம்பாலத்திற்கு இருபுறமும் இணைப்பு சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.
இணைப்பு சாலை பணிகள் நடைபெறும் இடங்களில் இருந்த வீடுகள், கடைகள் ஆகியவை அகற்றப்பட்டு உள்ளன.
காட்டூர் சாலையில், பாலம் அமையும் இடத்தில் அம்பேத்கர் சிலை இருந்தது. பாலப்பணிகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக, சிலையை மாற்று இடத்தில் வைக்க திட்டமிடப்பட்டது.
பல்வேறு அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்புடன் நேற்று, அம்பேத்கர் சிலை மாற்று இடத்தில் வைக்கப்பட்டது.
சிலையின் பீடத்தை சுற்றிலும் பள்ளம் தோண்டி, கிரேன் உதவியுடன் துாக்கி, அருகில் தற்காலிகமாக வைக்கப்பட்டு உள்ளது.
செங்குன்றம் உதவி கமிஷனர் ராஜா ராபர்ட் தலைமையிலான போலீசாரின் பாதுகாப்புடன், மாற்று இடத்தில் சிலை வைக்கும் பணிகள் நடைபெற்றன. பொன்னேரி தாசில்தார் சோமசுந்தரம் மற்றும் வருவாய்த்துறையினர், பல்வேறு கட்சியினர் உடன் இருந்தனர்.