/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மீஞ்சூர் ரயில்வே மேம்பாலத்திற்கு இணைப்பு சாலை பணி துவக்கம்
/
மீஞ்சூர் ரயில்வே மேம்பாலத்திற்கு இணைப்பு சாலை பணி துவக்கம்
மீஞ்சூர் ரயில்வே மேம்பாலத்திற்கு இணைப்பு சாலை பணி துவக்கம்
மீஞ்சூர் ரயில்வே மேம்பாலத்திற்கு இணைப்பு சாலை பணி துவக்கம்
ADDED : பிப் 03, 2024 11:38 PM
மீஞ்சூர்: மீஞ்சூர் - நந்தியம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே, எல்.சி., 16 ரயில்வே கேட் அமைந்து உள்ளது. இந்த ரயில்வே கேட் வழியாக, காட்டூர் - மீஞ்சூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள, 70 கிராமங்களை சேர்ந்தவர்கள் கடந்து செல்கின்றனர்.
வாகன ஓட்டிகளின் சிரமங்களை தவிர்க்க, 2016ல், சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின்கீழ், மேற்கண்ட ரயில்வே கேட்டின் அருகே, 38.84 கோடி ரூபாயில், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. ரயில்வே எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பாலத்திற்கான பணிகள், 2021ல் முடிந்தது.
பாலத்தின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்வதில் இழுபறி நீடித்து வந்தது.
கடந்த ஆண்டு, அணுகு சாலை அமையும் பகுதிகளில் இருந்த, வீடு மற்றும் நில உரியாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
அதை தொடர்ந்து அங்கிருந்த கட்டங்கள் இடித்து அகற்றப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது.
நீண்ட இழுபறிக்கு பின், நேற்று அணுகு சாலைக்கான பணிகள் துவங்கப்பட்டன. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் திருவள்ளூர் காங்., - எம்.பி., ஜெயக்குமார், பொன்னேரி காங்., - எம்.எல்.ஏ., துரை சந்திரசேகர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த பாலமானது திருவொற்றியூர் - பொன்னேரி - பஞ்செட்டி மாநில நெடுஞ்சாலையில் துவங்கி, மீஞ்சூர் - காட்டூர் நெடுஞ்சாலையில் முடிகிறது. இப்பணிகள் வரும், 2025 ஜூன் மாதத்திற்கு முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.