ADDED : மே 08, 2025 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி பகுதியில், ஆந்திரா மற்றும் தமிழக மதுபாட்டில்கள் கடத்தி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார் நேற்று, திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை போலீசார் சந்தேகத்தின்படி, நிறுத்தி சோதனை செய்ததில், 20 மதுபாட்டில்கள் கடத்தியது தெரிய வந்தது.
விசாரணையில், திருத்தணி இந்திரா நகரைச் சேர்ந்த மணி, 40, என, தெரிய வந்தது. அதை தொடர்ந்து போலீசார் மணியை கைது செய்தனர்.