/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் வழக்கு தொடரப்படும்
/
மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் வழக்கு தொடரப்படும்
மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் வழக்கு தொடரப்படும்
மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் வழக்கு தொடரப்படும்
ADDED : நவ 08, 2024 09:04 PM
நகரி:ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேச கட்சி தலைவரான சந்திரபாபுநாயுடு முதலமைச்சராக உள்ளார். இவர் ஆட்சிக்கு வந்ததும், அரசு சார்பில் இயக்கப்பட்டு வந்த மதுக்கடைகள், தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன.
தனி நபர்கள் ஏலம் மூலம் மதுக்கடைகள் எடுத்து, தற்போது நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடைகளில் மதுபாட்டில்களின் விலை எம்.ஆர்.பி.யை விட கூடுதலாக மதுபானங்கள் விற்பனை செய்து வருவதாக தொடர்ந்து அரசுக்கு புகார் சென்றது.
சித்துார் மற்றும் திருப்பதி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கடைகளில் மதுபானங்கள் விலை கூடுதல் விலைக்கு விற்று வந்தனர்.
இதையடுத்து, சித்துார் மற்றும் திருப்பதி மாவட்ட மதுவிலக்கு மற்றும் நீதித்துறை துணை ஆணையர் தலமலா விஜயசேகர் மதுபான கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து, அனைத்து கடைகளுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளார்.
செய்தியாளர்களிடம் துணை ஆணையர் கூறியதாவது:
அரசு நிர்ணயித்த விலையை விட உரிமம் பெற்றவர்கள் அதிக விலைக்கு மது விற்றால் வழக்கு பதிவு செய்யப்படும்.
மேலும், அரசு ஒதுக்கிய கடைகளை தவிர்த்து, பெட்டிக் கடை மற்றும் பார்களில் மதுபானம் விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்வதுடன் கடை உரிமையாளர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.