/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலக்கிய மன்ற போட்டி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலக்கிய மன்ற போட்டி
ADDED : செப் 04, 2025 02:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு:அரசு பள்ளி மாணவர்களுக்கு இடையே, வட்டார அளவிலான இலக்கிய மன்ற போட்டிகள் நேற்று நடந்தன.
அரசு பள்ளிகளில், பாடவாரியாக இலக்கிய மன்றம் துவங்கப்பட்டு, செயல்பட்டு வருகின்றன. மேலும், உயர்தொழில்நுட்ப ஆய்வகத்தில், சிறார் திரைப்படங்கள் திரையிட்டு காட்டப்படுகின்றன.
இலக்கிய மன்றம் மற்றும் சிறார் திரைப்படம் சார்ந்த வினாடி வினா போட்டிகள் நேற்று பள்ளிப்பட்டில் நடந்தது.
பள்ளிப்பட்டு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்த போட்டிகளில், பள்ளிப்பட்டு தாலுகாவை சேர்ந்த பள்ளி மாணவ- மாணவியர் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.